Amla Powder Abhishekam For Danvantri and Vinayagar

ஆயுள் தோஷம் நீங்கும் ஔஷத பிரசாதம்

நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் "சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 13.03.2018 செவ்வாய்கிழமை ஏகாதசி திதி மற்றும் 14.03.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது. இன்றைக்கு எத்தனையோ ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு ஹோமங்கள் என்றெல்லாம் நித்தமும் நடந்து வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் ஒரு தனித்துவத்துடன் வெளியே அடையாளம் காணப்பட்டாலும், இவை அனைத்துக்கும் பின்னால் சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு மந்திர மலை எனும் ஔஷதகிரியில் பிரமாண்ட நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்பவர் சாட்சாத் மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானும் யக்ஞபுருஷரான ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் தான்!

இந்த யக்ஞ பூமியின் நாயகர்கள் இவர்கள் தான். இவர்கள் தான் அனைத்துக்கும் ஆதாரம். இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில். அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் மேற்கண்ட தினங்களில் ஹோமமும் நெல்லி பொடி அபிஷேகமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது

திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். அன்னாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்தில்கொண்டு திருவோண ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் ஹோமங்கள் நடைபெறுகிறது.

திருவோண ஹோமத்தில், பூஸூக்த ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்தில் கலந்துகொண்டு தைலப்பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images