இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்கவும் தாக்கத்தின் அச்சம் குறையவும் மற்றும் பாதிக்கபட்ட நபர்கள் விரைவில் குணமடையவும் நாளை 12.03.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி, அந்த நாட்டை ஆட்டிப் படைத்து நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி தற்போது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இந்திய அரசும் தமிழக அரசும் மற்ற மாநிலங்கலும் நோய் தடுப்புக்கான பல்வேறு தீவிர நடவடிக்கைகளும் விழிப்புனர்வுகளும் எடுத்து வருகிறது.
மனிதர்களுக்கு பரவக் கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாச கோளாறுகள், தொண்டையில் கடுமையான வலி, மார்பு பகுதியில் வலி, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து உடல் பலவீனமாக்கி பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய கடுமையான கொரோனா வைரஸ் நோயின் அச்சம் குறையவும், பாதிப்புகள் குறையவும், பயம் விலகவும் விழிப்புணர்வு ஏற்படவும் தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட தேதியில் தன்வந்திரி ஹோமமும் கூட்டுப்பிராத்தனையும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பிராத்தனை செய்ய அன்புடன் அழைக்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.