Four Homams

(சந்தான கோபால யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் சுப்ரமண்ய ஹோமம்)

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி நாளை 29.05.2018 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை வைகாசி விசாகத்தை முன்னிட்டு நல்லவை தரும் நான்கு யாகங்கள் நடைபெற உள்ளது.

இந்த வைகாசிமாத பௌர்ணமி நாளை "வைகாசி விசாகம்” என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்" மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்” என்றும் அழைக்கின்றனர்.

”அவதாரம்” என்ற வடமொழி சொல்லுக்கு "கீழே இறங்கி வருதல்” என்று பொருள். உலகில் அதர்மச் செயல்கள் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும் போது, மக்கள் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஓர் உருவில் கீழே இறங்கி உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே வைகாசி மாத பௌர்ணமி நாளன்று முருகன் அவதரித்தான்.

உலகிலுள்ள ஜீவன்களின் தோற்றம் நான்கு வகைப்படும். அவை பைகளில், முட்டையில், நிலத்தினில், வியர்வையில் என புராணம் கூறுகிறது. இதைக் குறிக்கவே படைக்கும் கடவுளுக்கு நான்கு தலைகள். நாம் எல்லாரும் பெண் வழித் தோன்றியவர்கள். அதனால் பெண் பிள்ளைகள். முருகன் ஒருவன் மட்டும் ஆண் மூலம்- ஆறு அதாவது சிவனின் ஆறு நெற்றிக் கண்களின் சுடரால் பிறந்தவன். எனவே இவன் மட்டும்தான் ஆண் பிள்ளை.

முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சுப்பிரமண்யர் ஹோமத்தில் கலந்து கொண்டு கார்த்திகை குமரனை வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து கார்த்திகைக்குமரனை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. "ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது. மாதம் தோறும் விசாக நட்சத்திரம் வந்தாலும், தமிழ் மாதமான வைகாசியில் வரும் இந்த நட்சத்திரம் வைகாசி விசாகம் என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது.

எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான். இந்த நாளில் எமதர்மனுக்கு தனிபூஜை செய்கிறார்கள். அவ்வாறு பூஜை செய்வதால் நோய்கள் நீங்கும், நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்.

ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். அவர் பிறந்ததும் வைகாசி விசாக நாளில்தான்.

குழந்தை பாக்கியத்திற்காக கோயில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அந்த் பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த முருகப்பெருமானை தன்வந்திரி பீடத்தில் 468 சித்தர்கள் முன்னிலையில் கார்த்திகை பெண்களுடன் கார்த்திகை குமரனாக பிரதிஷ்டை செய்துள்ளார் ஸ்வாமிகள். கார்த்திகை குமரனின் சிறப்பு தினங்களில் சிறப்பு யாகங்களும், அன்னதானங்களும் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் நாளை 29.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு உலக நலன்கருதி சிறப்பு சுப்பிரமண்ய ஹோமம், சந்தான கோபால யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் வளம் பெற ப்ரார்த்திக்கின்றோம்…

Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images