Kandha shasti-Sathru Samhara Homam

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 20.10.2017 வெள்ளிக்கிழமை முதல் 25.10.2017 புதன் கிழமை வரை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு உபாதைகள் அகலவும் கந்த ஷஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறவுள்ளது.

கந்த ஷஷ்டியின் சிறப்பு

விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய் வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.அவை முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதமேயாகும்.

நாளை கந்த சஷ்டி விரதம் ஆரம்ப மாகுவதுடன், எதிர்வரும் 25அம் தேதி வரை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கந்தசஷ்டி விரத முறைகளை ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்:

நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், குழந்தை பாக்யம் கிடைக்கவும் ,வேலைவாய்ப்பு அமையவும், கடன் தொல்லை நீங்கவும் மேற்கண்ட யாகம் தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறவுள்ளது "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த யாகமாகும். மேலும் விரும்பிய பலனைப் பெறலாம். கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு). கார்த்திகைப் பெண்களுக்கு வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார். நாளை 20.10.2017 முதல் 25.10.2017 வரை கந்த ஷஷ்டியை முன்னிட்டு நடைபெறும் சத்ரு ஸம்ஹார ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையிலும், அபிஷேகத்திலும், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்து நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images