வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி, “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள், ஆக்ஞைப்படி தை அமாவாசை எனும் மஹோதய அமாவாசையை இன்று 04.02.2019 திங்கள்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நிகும்பலா யாகம் நடைபெற்றது.
அமாவாசையில் நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் இங்கு மிகவும் சிறப்பு. இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளாகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது தனி சிறப்பு.
இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், திருமணம், வியாபாரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.பில்லி, சூன்யம், நோய், தரித்திரம் போன்றவை அகலவும் இழந்த பதவி கிடைக்கவும். ஐஸ்வர்யம் பெருகவும். ராகு,கேது தோஷம் நீங்கவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்றது.
இதில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், மிளகு, உப்பு, 108 வகையான மூலிகைகள், காய்கறி வகைகள், பழ வகைகள், இனிப்பு மற்றும் கார வகைகள், பூசணிக்காய்கள், புடவை, பல வகையான புஷ்பங்கள், 27 நட்சத்திர தேவதைகளுக்கு உண்டான தாவரங்கள், நெய், தேன் என, இன்னும் திரவியங்கள் இந்த ஹோமத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version