Purattasi Ekadasi 108 Herabal Theerthabishekam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் புரட்டாசி ஏகாதசியை முன்னிட்டு 25.09.2019 வருகிறபுதன்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு ” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வைத்திய ராஜன் ஆன மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, வாத நோய்கள் உட்பட பல வகையான நோய்கள் தீர நெல்லிப் பொடியுடன் 108 மூலிகை தீர்த்த அபிஷேகமும் சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெற உள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஏகாதசி தோறும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப் பொடியுடன் பல்வேறு மூலிகைகள் கொண்டு நோய்கள் நீங்க சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று வருகிறது.

புரட்டாசி ஏகாதசி விரதமும் பலன்களும் :

ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ஆம் நாள் ஏகாதசி வருகிறது. ஒரு வருடத்துக்கு24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது. நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும், இயற்கை வளம் பெறும், தெய்வீக அருள் கூடும்.

இந்த நாளில்தான் அரிச்சந்திரன், விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே நாமும் இவ்விரத நாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏகாதசி திதியில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் நெல்லிப் பொடி மற்றும் 108மூலிகை தீர்த்த அபிஷேகத்திலும் யாகத்திலும் பங்கேற்று உடல் ரீதியாக ஏற்படும் நோய்களில் இருந்தும், மனரீதியாக ஏற்படும் நோய்களிலிருந்தும் நிவாரணம் பெற்று மேற்கண்ட அனைத்து விதமான பலன்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் நிறைவான செல்வத்துடன் ஆன்ந்தமாக வாழ அன்புடன் அழைக்கின்றோம். இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள்,வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images