Sri Atharavana Badrakali Pratyankira Devi Mahayagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி"கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்அருளானைப்படி உலக நலன் கருதியும், சகல கார்ய சித்தி பெறவும், வருகிற11.08.2018சனிக் கிழமை காலை 11.00 மணியளவில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி மஹாயாகம், பாலபத்ரா தாந்த்ரீக வித்யா பீடம் ஸ்தாபகர்சரப சூலினி ப்ரத்யங்கிரா மஹா காளி காலபைரவன் பாலா திரிபுர சுந்தரி உபாசகர் சிவஸ்ரீ விக்னேஸ்வர சர்மாஅவர்களால் நடைபெற உள்ளது.

தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்த அன்னையானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். இத்தேவியின் அருள் பெற கீழ்கண்ட 33 விதமான திரவியங்களை கொண்டு 33 விதமான கார்யங்களில் சித்தி பெற ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா தேவி யாகம் 11.08.2018 ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெற தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது.

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும்.

தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். மேற்கண்ட மஹா யாகம் சகல கார்ய சித்தி பெறவும், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் நடைபெறுகிறது. இந்த மஹா யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை நீங்கி. செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்கும். மேலும்1.நினைத்த காரியம் ஜெயமாக – விளாம்பழமும்,2. சகலகார்ய சித்தி தரும் -கொப்பரைத் தேங்காயும், 3. சர்வ வஸ்யம்நல்கும் – இலுப்பைப்பூவும்,4. சர்வ ரோக நிவர்த்திக்கு –பாக்குப்பழமும்,5. வாக்குப் பலிதம்பெற – மாதுளம்பழம்,6. திருஷ்டிதோஷநிவர்த்திக்கு – நாரத்தம்பழமும்,7. எதிலும் வெற்றி பெற / சத்ருநாசினிக்கு – பூசணிக்காயும்,8. நேத்ர ரோக நிவர்த்திக்கு -கரும்புத் துண்டும்,9. சகல சம்பத்து அபிவிருத்திக்கு -துரிஞ்சி நாரத்தையும்,10. கவலை தீர –எலுமிச்சம்பழமும், 11. பயம் நீக்கும் -நெல் பொரியும்,2. ஞானம் தரும் –சந்தனமும், 13. வசீகரணம்தரும் – மஞ்சள், 4. ஆயுள் விருத்திக்கு –பசும்பாலும், 15. புத்ர விருத்திக்கு –பசுந்தயிரும்,16. வித்தை, சங்கீத விருத்திக்கு –தேனும், 17. தனலாபத்திற்கு –நெய்யும், 18. பதவி உயர்வுக்கு – தேங்காயும், 19. மங்களப் பிராப்திக்கு -பட்டு வஸ்திரமும்,20. சஞ்சலம் நீங்கிசந்தோஷம் பெற – அன்னம் மற்றும் பட்ஷணமும், 21. மன வலிமைக்குகருங்காலியும், 22.அஷ்ட ஐஸ்வர்யத்திற்கு –நவ சமித்துக்களும். இவற்றுடன்சகல கார்ய சித்திக்கும் ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும், கண் திருஷ்டி தோஷங்கள், திருமணம், தொழில், வியாபாரம், உத்யோகம், தம்பதிகள் ஒற்றுமை, பூமி சம்பந்தமான தோஷங்கள், வழக்கு வியாஜ்யங்கள், போன்றவைகளுக்காகவும் அம்பாள் பரிபூர்ண அருள் பெற11 கிலோ மஞ்சள், 11 கிலோ சிகப்பு குங்குமம், 11 கிலோ நெருஞ்சிமுள்ளும், 11 கிலோ மிள்காய் வற்றலும், 11 கிலோ நெய்யும், 11 கிலோ சாதமும், 11 பூசணிக்காயும், இதர சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, வால் மிளகு, லவங்கம் போன்ற திரவியங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக புல்லுருவிசர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவிஆண் வசியத்தையும்,நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்குசத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல கார்யங்களுக்கும் பயன்படுகிறது. ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து, பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரம் ஜபித்து நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Upcoming Events
Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images