Sri Lakshmi Narasimar Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாசி சுவாதி நக்ஷத்திரம் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும், போன்ற பல்வேறு தோஷங்களுக்காக, மேற்கண்ட யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்க்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஸ்ரீ சக்கிரத்தாழ்வார் சன்னதிகளில் வைத்து பூஜித்த விசேஷ பிரசாதம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்கி ஆசீர்வதிக்க உள்ளார்.

ருண ரோக சத்ரு நாசினியான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் சிறப்பு:

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்தவரும், மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும் மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை வணங்கி அருள்பெற மேற்கண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் யாகமும் சிறப்பு வழிபாடும் புஷ்பார்ச்சனையும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:

ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள், ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203, Web : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in E-Mail: danvantripeedam@gmail.com

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images