Swarna Gowri Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி வருகிற 12.08.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணி அளவில் ஆடி மாதம் மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்வர்ண கௌரி யாகம் நடைபெறுகிறது.

ஸ்வர்ணகௌரி யாகம் :

மேற்கண்ட யாகம் முக்கோண வடிவ ஹோமகுண்டத்தில் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு அஷ்ட ஐஸ்வ

ர்யங்களும் கிடைக்க செய்யும் என்பது மக்களின் அபரிமிதமான நம்பிக்கை ஆகும்.

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோக வசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ ஸம்பத் ப்ரதம்
தேஹி குருகுரு ஸ்வாஹா
ஸ்வர்ணகௌரி என்றும், ஸம்பத்கௌரி

கௌரி என்றாலே அன்புடையவள், அழகுடையவள், கருணையுடையவள் மற்றும் தங்கநிறம் உடையவள் என்று பொருள். அவளை நம்பி வழிபடும் பக்தர்களுக்கு எல்லையற்ற செல்வத்தையும், பொன்னையும், பொருளையும் அளிப்பவள். அதனால் அவளை ஸ்வர்ணகௌரி என்றும், ஸம்பத்கௌரி என்றும் பக்தர்கள் போற்றி அழைக்கின்றனர்.

கௌரியின் பல்வேறு நாமங்கள் :

ஸம்பத் கௌரி செல்வத்தை அருள்பவள். மங்கள கௌரி திருமணத்தையும் மாங்கல்யம் அளித்து மங்கள வாழ்வு அருள்பவள். கஜகவுரி வலிமையை அளிப்பவள். விருத்தி கவுரி மக்கட்பேற்றை அளிப்பவள். துளசி கௌரி விஷ்ணுவின் அருளை அளிப்பவள். கேதார கௌரி ஈஸ்வரனின் அருளை அளிப்பவள். லாவண்யகௌரி அழகை அளிப்பவள். ஸௌபாக்ய கௌரி எல்லா நன்மையும் அளிப்பவள். புன்னாக கௌரி ஸர்ப்ப தோஷம் நீக்குபவள். சமீப கௌரி மோட்சத்தை அளிப்பவள். வரதா கௌரி பக்தர்களுக்கு கேட்ட வரங்கள் அளித்து அபயம் அளிப்பவள்.

யாகத்தில் சேர்க்கப்பட உள்ள விசேஷ திரவியங்கள் :

இந்த யாகத்தில் வில்வதளம், மஞ்சள், தூயப்பட்டு, ரோஜா மலர்கள், சிவந்த புஷ்பங்கள், வேம்பு, தேன், எள்ளு, சந்தனம், மற்றும் பல விசேஷ பழங்கள், நெய், மூலிகைகள், சேர்க்கப்பட உள்ளன.

கௌரி யாகத்தின் பலன்கள் :

செல்வம், தங்கம், நகைகள் சேர்க்கையும் ஏற்படும். கல்வியில் தேர்ச்சியும், மக்கள் கவர்ச்சியும் ஏற்படும். சத்ருநாசமும் பித்ருதோஷம் நீங்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். சர்ப தோஷம் நீங்கும். தடைபெட்ட திருமணம் நடைபெறும். மன வலிமை பெறும். சகல சௌபாக்யங்கள் பெறலாம். மாங்கல்ய பலம் கூடும். மஹாவிஷ்ணு மற்றும் பரமேஸ்வரனின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டாகும்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் மஞ்சள், குங்குமம், விசேஷ திரவியங்கள், பூசணிக்காய், சௌபாக்ய பொருட்கள், எலுமிச்சம் பழம், மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், , மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images