Twenty One Special Homam

உலகில் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்தி வருகிறார் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள் பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுய நலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் சிறப்பாக இறைவனுக்காக நாம் செய்வதில்லை. நம்முடைய குறைகளை தீர்ப்பதற்காகவே செய்யப்படுவது ஹோமங்கள் என்கிற யாகங்கள் எனலாம்.

முன்பு உலக நன்மைக்காகவும் இயற்கையைக் குளிர்வித்து இறைவனைக் காண யாகங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் தேவைக்காகவும், சுய நலன்களுக்காகவும் அதிகமாக ஹோமங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

யாகங்களின் போது, பல்வேறு சிறப்புகளுடைய இயற்கைப் பொருட்களான திரவியங்களை கொண்டு யாகத்தில் சேர்த்து வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்திர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வேள்வியில் பக்தர்களின் பல்வேறு நோக்கங்களையும், தேவைகளையும், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித்தரும் வகையில் அந்தந்த தெய்வங்களுக்குரிய யந்திரங்களுக்கும் தெய்வங்களுக்கும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 11.07.2018 புதன்கிழமை காலை கோ பூஜையுடன், கலச பூஜை, ஜபத்துடன் கீழ்கண்ட 21 ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. நாளை 12.07.2018 வியாழக்கிழமை மாலை வரை நடைபெறும் இந்த யாகத்தில் பல்வேறு மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், சித்ரான்னங்கள் சேர்க்கப்பட உள்ளது. இந்த யாகங்களின் மூலம் பக்தர்கள் பலன் அடைவார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

1. ஸ்ரீ தரணியந்திரத்துடன் ஸ்ரீ தரணி ஹோமம் :

ஸ்ரீ தரணி யந்திரம் மற்றும் ஹோமத்தின் பலன், பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கு இன்றியமையாதது. ஸ்ரீ தரணிஹோமம் செய்து, பின் தரணி யந்திரத்தை பெற்று முருகப் பெருமான் படத்துடன் வைத்துப் பூஜைசெய்து வந்தால் பூமியால் ஏற்படும் தடைகள் விலகும்.

2. ஸ்ரீ நீலா சரஸ்வதி யந்திரத்துடன் ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம் :

இந்த ஹோமம், எதிரிகளை வெற்றிகொள்வதற்கும், நற்காரியங்களில் ஏற்படும் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும் உதவக் கூடியது. நீலா சரஸ்வதி ஹோமம் செய்து யந்திரத்தை பெற்று சரஸ்வதி படத்துடன் வைத்துப் பூஜை செய்து வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.

3. ஹரித்ரா கணபதி மஹா யந்திரத்துடன் ஸ்ரீ கணபதி ஹோமம் :

இந்த ஹோமத்தில் பங்கேற்று யந்திரம் பெற்று தொடர் பூஜை செய்பவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டுவதுடன் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

4. ஸ்ரீ கருட யந்திரத்துடன் ஸ்ரீ க்ருட பஞ்சாக்ஷரி ஹோமம் :

விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்கள் விலகும், விபத்து ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யும், விபத்து ஏற்பட்டவர்கள் விரைவில் குணமடைவார், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், ஞாபக மறதி, குழம்பிய மனநிலை, சர்ப்ப சம்பந்தப்பட்ட பீடைகள் இராகு தோஷங்கள் நீங்குவதற்கு இந்த ஹோமம் உறுதுணை புரியும்.

5. ஸ்ரீ தக்ஷண காளி மஹா யந்திரத்துடன் ஸ்ரீ தக்ஷண காளி ஹோமம் :

எதிரிகளை வெல்லவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை தண்டித்து தன்னை வணங்குபவருக்கு தக்க அபயமளித்து காத்து ரக்ஷிக்கச் செய்யும் உபாசகனுக்கு தரிசனம் தந்து காக்கும் தெய்வம் தக்ஷிண காளியைத் திருப்திப்படுத்தும் மாபெரும் ஹோமம்.

6. ஸ்ரீமத் மஹா ஆஞ்சனேய யந்திரத்துடன் ஸ்ரீ ஆஞ்சனேய ஹோமம் :

சத்ரு ஜெயம், தீர்க்காயுசு, ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் தந்து தடைகளில் இருந்து நிவாரணம் பெறலாம், இராமபிரான் சீதையுடன் கூடிய பட்டாபிஷேக படத்துக்கு சந்தன குங்குமம், செவ்வந்திப்பூச் சார்த்தி, இன்னும் சில கிரியைகள் செய்திட ஸ்ரீ ஆஞ்சனேயர் அனுக்கிரகம் கிடைக்கும்.

7. ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி யந்திரத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஹோமம் :

மாங்கல்ய தோஷம் விலகும், மரணபயம் அகலும், சௌபாக்யங்கள் கிடைக்கும், தடைகள் விலகும், வசியம், ஆரோக்கியம், சத்ரு ஜெயம், சாந்தி புஷ்டி, தானியவளம், சத்ரு நாசம், பூதாதிகளின் நாசம் இவற்றை அளிக்கவல்லது.

8. ஸ்ரீ மஹா சாஸ்தா யந்திரத்துடன் ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம் :

பிள்ளைப் பேறு, சத்ரு நாசம், ஜகத்திலுள்ள உயிர்களின் வசியம், எப்பொழுதும் எதற்கும் அஞ்சாத திடமும், உடல் வலிவும் பெற இந்த ஹோமம் மற்றும் யந்திரம் உதவும்.

9. பாசுபத யந்திரத்துடன் பாசுபதாஸ்தர ஹோமம் :

இதன் சாதனை ஹோமமும், யந்திரமும் கூடும்பொழுது எந்தப் பகையையும் விலகி ஒடவைக்கும். துன்பங்கள் அனைத்தையும் போக்கும். பகைவர்கள் நட்புக்கொள்வர்.

10. ஸ்ரீ மஹாலக்ஷ்மி யந்திரத்துடன் வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் :

வீட்டில் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து குவிக்கும். ரத்தினங்கள், ஆபரணங்களின் சேர்க்கையைக் கூட்டுவிக்கும்.

11. ஸ்ரீ காயத்ரீ யந்திரத்துடன் ஸ்ரீ காயத்ரீ ஹோமம் :

மந்திரங்களின் மூலசக்தி ஸ்ரீ காயத்ரீ தேவியே. எந்த மந்திர உச்சாடனத்திற்கும் காயத்ரீ மந்திரத்தை ஜெபித்த பின்னரே உரிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். சர்வ காரிய சித்திகளுக்கும் துணை நிற்கக் கூடியவை இந்த ஹோமமும் யந்திரமும்.

12. ஸ்ரீ வராஹி யந்திரத்துடன் ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமம் :

ஆறு முக்கோணங்களைத் தன்னுள்ளடக்கிய யந்திரத்தை உடையவள் வராஹி. வேண்டி வணங்குபவருக்கு வேண்டும் வரங்களைத் தருபவள். வேறு எந்த சக்தி எதிர்த்தாலும் தன்னைப் பூஜிப்பவருக்கு தங்குதடையின்றி வரம் தருபவள். தரித்தரங்கள் விலகும், மன சஞ்சலங்கள் அகலும்.

13. பூர்ண புஷ்கலா தேவி யந்திரத்துடன் பூர்ண புஷ்கலா ஹோமம் :

பூர்ணா தேவி:

பூர்ணம் என்றால் நிறைவு. பொன்னிறம் வாய்ந்தவள். நீலத்தாமரையை இடது கையில் பிடித்தவள். வலது கை தொங்கிய நிலையானவள். கிரீடம் சூடியவள். சாஸ்தாவின் வலது பக்கத்தில், இடது காலை மடித்தவளாய், வலது காலை தொங்கவிட்டவளாய் அமர்ந்திருப்பவள். இதுவே பூர்ணா தேவியின் தோற்றமாகும்.

புஷ்கலா தேவி:

புஷ்கலம் என்றால் முழுமை. நீலநிறம் வாய்ந்தவள். வரமருளும் முத்ரையை இடது கையில் கொண்டவள். வலது கையில் ஒரு மலரும் கொண்டவள். கிரீடம் அணிந்தவள். சாஸ்தாவின் இடது பக்கத்தில், வலது காலை மடித்தவளாய், இடது காலை தொங்கவிட்டவளாய் அமர்ந்திருப்பவள். இதுவே புஷ்கலா தேவியின் தோற்றமாகும். எதிலும் நிறைவான செல்வங்களையும் சௌபாக்கியங்களையும் தருபவர்கள் பூர்ண புஷ்கலா தேவியர்கள். மனக்குறைகளை நீக்கி மகிழ்ச்சி தருபவர்கள். மாங்கல்ய பலம் சேர்ப்பவர்கள். மன நிறைவை உண்டாக்கி நலம் தரும் ஹோமமாகும்.

14. ஸ்ரீ தன்வந்திரி யந்திரத்துடன் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் :

அனைத்து விதமான உடல் பிணி, உள்ளத்து பிணி நீக்கி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது தன்வந்திரி ஹோமம். மேலும் நீண்ட நாட்கள் நோயால் பீடிக்கப்பட்டவர்களை நலம் பெற்று பலம் பெறுவர். அமுத கலசத்தைக் கொண்டு சர்வரோக நிவாரணம் அளிப்பவர்.

15. ஸ்ரீ குபேர யந்திரத்துடன் ஸ்ரீ குபேர ஹோமம் :

வறுமையைப் போக்கி கடன்களைத் தீர்த்து அபரிமிதமான செல்வச் சேர்க்கையை தந்து மனதிற்கு நிம்மதியளித்து நாள் தோறும் சந்தோஷத்தை வழங்கி வருவது இந்த குபேர யந்திரமும் ஹோமமும்.

16. ஸ்ரீ சக்தி யந்திரத்துடன் ஸ்ரீ சக்தி ஹோமம் :

ஐஸ்வர்யம், பராக்ரமம், சர்வஜன வசியம் அனைத்தும் அருளி, பராசக்தி தேவியின் பரிபூரண அருள் கிடைக்க செய்யும் ஹோமம்.

17. ஸ்ரீ வடுக பைரவ யந்திரத்துடன் ஸ்ரீ வடுக பைரவ ஹோமம் :

அனைத்து பயங்களிலிருந்து பக்தர்களை காக்கும் ஹோமம். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாய்த் தெரிவது. பூஜிப்பவரைக் காக்கும் வல்லமை கொண்டது. பேய் பிசாசு தொல்லை நீக்கிடும். பில்லி சூனியத்தையும், மாந்திரீகங்களையும் தவிடு பொடி ஆக்கி வாழவைக்கும் வடுக பைரவர் யாகம்.

18. ஸ்ரீ காமாக்யா யந்திரத்துடன் ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமம் :

தம்பதிகளின் கருத்தொருமித்த காமாக்கியங்களுக்கு வல்லமையைத் தருவது. ஸ்பரிச உணர்வில் காந்த சக்தியை வர்ஷிப்பதுடன் மனதில் நிறைவையும் தருவது. பெண்களின் இரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கும் இந்த ஹோமம்.

19. ஸ்ரீ மகாலட்சுமி யந்திரத்துடன் மகாலட்சுமி ஹோமம் :

லக்ஷ்மி நாராயணன் பூஜையுடன் கூடியது. இது சர்வ ஐஸ்வர்யமும் அருள்வது. அஷ்டலக்ஷ்மியின் அனைத்துச் சக்திகளையும் கொடுத்து பக்தர்களின் வாழ்வை உயர்த்தி நலம்பெற செய்வோம்.

20. அஷ்வாரூட யந்திரத்துடன் அஸ்வாரூட ஹோமம் :

சகல விதமான தோஷங்களையும் நீக்கவல்லது. வெளிநாடு செல்லத் தடை ஏற்பட்டால் அதை நீக்குவது, வெளிநாடு, கடல் கடந்து சென்று பணம் சம்பாதிக்க அருள்வது. தொழில், உத்யோகத்தில் ஏற்படும் பயத்தைப் போக்க வல்லது.

21. பாலமுருகன் யந்திரத்துடன் ஸ்ரீ பாலமுருகன் ஹோமம் :

சத்ரு சம்ஹார ஹோமத்தின் பலனைத் தருவது இந்த ஹோமம். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லது. பூமி சம்பந்தமான தோஷங்கள் அகல வழி பிறக்கும்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Tamil version

Upcoming Events
Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images