Vasthu Homam For Healthy Life

ஆண்டின் எல்லா நாட்களும் உறங்கியபடி இருக்கும் இந்த வாஸ்து பகவான், வருடத்திற்கு எட்டு நாட்கள் மட்டுமே விழித்து இருந்து வாஸ்து நாளில் அருளாசி செய்வார்.

வருடத்திற்கு எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்கள்......

சித்திரை 10-ம் தேதி, வைகாசி 21-ம் தேதி, ஆடி 11-ம் தேதி, ஆவணி 6-ம் தேதி, ஐப்பசி 11-ம் தேதி, கார்த்திகை 8-ம் தேதி, தை 12-ம் தேதி, மாசி 22-ம் தேதி ஆகிய இந்த எட்டு நாட்கள் தான் வாஸ்து நாட்கள் எனப்படுகிறது. இந்த நாளில் தொடங்கப்படும் எந்த கட்டிட வேலைகளும் சிறப்பாக அமையும் என்பது பொதுவான நம்பிக்கையாகும்.

தன்வந்திரி பீடத்தில் இன்று வாஸ்து ஹோமம்.....

இன்று (28-10-17) வாஸ்து நாளாகும் . இநாளில் வாஸ்து பூஜைகள் செய்தால் நன்மை ஏற்படும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். எனவே இன்று வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவானை மகிழ்விக்கும் விதமாகவும் வளமான வாழ்வு வேண்டியும் ஸ்ரீ வாஸ்து ஹோமமும் தன்வந்திரி பீடத்தில் உள்ள வாஸ்து பகவனுக்கும் அஷ்டதிக் பாலகர்களுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்றது.

வாஸ்து ஹோமத்தில் பிரார்த்தனை.......

இதில் புதிய அல்லது மறு சீரமைப்பு கட்டிட வேலைகளை தொடங்குவதுக்கும் நாம் வாழும் இடம் வாஸ்து சாஸ்திரம், மனையடி சாஸ்திரத்துடன் நல்ல காற்றும் வெளிச்சமும் சுற்று பொருள் சூழ்நிலையுடன் நல்ல இடமாக அமைந்து மக்கள் செல்வத்துடன் ஐஸ்வர்யம், ஆரோக்யம், ஆனந்ததுடன் சிறப்பாக வாழ பிரார்த்தனை செய்யப்பட்டது.சூரியனை அடிப்படையாக கொண்ட இந்த வாஸ்து சாஸ்திரத்தின் நாயகன் வாஸ்து பகவான் வாஸ்து பகவானும் பஞ்ச பூதங்களும் ஒருங்கிணைந்து ஒரு நிலத்தை வளமிக்கதாக மாற்றி அங்கு வாழும் உயிர்களை ஆசிர்வதிப்பதாக் சொல்லபடுகிறது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images