Five Homams for Asta Aishwaryam

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்.......

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு 01.01.2020 புதன்கிழமை, காலை 10.00 மணியளவில் கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

1. கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.

2. பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.

3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.

4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.

5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்.

ஆகிய அஷ்ட ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும்,கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு அர்ச்சனையும், ப்ரார்த்தனையும் நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், பட்சனங்கள், பட்டு புடவைகள், நெய், தேன், தாமரை விதை, தாமரை புஷ்பங்கள் சேர்க்கப்பட உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் கலந்து கொண்டு நடைபெற இந்த ஹோமத்தில் பக்தர்களும், பல்வேறு தரப்பு மாணவ மாணவிகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த யாகங்கத்தில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறவும், ஞாபக சக்தி வளரவும் மற்றும் பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து பெற்று வாழவும், இயற்கை வளம், மண் வளம், மழை வளம் பெற்று வியாபாரம், தொழில், விவசாயம், கலைத்துறைகள் முன்னேற்றம் காணவும், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஹயக்ரீவர், சரஸ்வதி, தன்வந்திரி, லக்ஷ்மி குபேரர், மரகதேஸ்வரருக்கு நவகலச அபிஷேகமும், 27 நக்ஷத்திரக்காரர்களின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images