

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரியைமுன்னிட்டும் பெண்கள் சௌபாக்கியங்கள் பெற்றுதீர்க சுமங்கலிகளாக வாழவேண்டி இன்று 28.09.2017 வியாழக்கிழமைவளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்குநவதுர்கா ஹோமமும், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்குசிறப்பு அபிஷேகமும். நடைபெற்றது
சமசுகிருதத்தில் நவ என்றால் ஒன்பது எனபொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக்கூறுகின்றன. சைலபுத்ரி,பிரமசாரிணி,சந்திரகாண்டா,கூஷ்மாண்டா,ஸ்கந்தமாதா,காத்யாயினி,காளராத்திரி,மகாகௌரி,சித்திதாத்திரிஎன அன்னை ஒன்பது வடிவம்கொண்டிருக்கிறாள்.
இந்த யாகத்தில் பில்லி,சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும்,கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும்தோஷங்கள்,மாத்ரு-பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மைவிட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத்தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்தநவதுர்கா ஹோமத்தில்சிறப்பு திரவியங்கள் சேர்க்கபட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். இந்த தகவலைஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
For Homam Details & Price :
Call : +91 94433 30203