

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று 24ம்தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை
10 மணிக்கு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான் சன்னதியில், தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து 108 மாவிளக்கு பூஜையுடன்
புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு மாவிளக்கு பூஜை மற்றும் புஷ்பாஞ்சலியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
ஸ்ரீ தன்வந்திரி பகவானை வணங்கி வழிபாடு செய்து ,
ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடமும் ஆசி பெற்று சென்றனர்.