

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 108 வகை மலர்கள், மூலிகைகள் மற்றும் திரவியங்களை கொண்டு தீர்த்த திருமஞ்சன அபிஷேகம் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமானுக்கு நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ஸ்ரீ முரளிதர சுவாமிகள் முன்னிலையில் கலெக்டர் நந்தகோபால் நல உதவிகள் வழங்கினார்.
வாலாஜா அடுத்த கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 12 ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு அதில் பங்கேற்ற சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிசரடு, சேலை வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து 108 மலர்கள் மூலிகைகள் திரவியங்களைகொண்டு ஸ்ரீ ஆரோக்யா லட்சுமி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கபட்டன.
அதை தொடர்ந்து ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் இரா.நந்தகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று நலஉதவிகள் வழங்கினர்.
இதில் சென்னை ஈஎஸ்ஐ மருத்துமனை அலுவலர் டாக்டர் ரங்கராஜன் சென்னை போரூர் ரமணா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் குணசேகரன் வேலூர் துர்கா பவன் அதிபர் உதய்சங்கர் வாலாஜா தாசில்தார் குணசீலன் ஆற்காடு அண்ணாமலை அறக்கட்டளை நிர்வாகி சரவணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tamil version