

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அட்சயதிருதியை முன்னிட்டு வருகிற 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை இந்துக்களின் புனித மாதமான சித்திரை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டி ஏகோபித்த பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பயன் தரும் 16 ஹோமங்கள் மேற்கண்ட தேதிகளில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கீழ்கண்ட 16 ஹோமங்களை நடத்த உள்ளார்.
பக்தர்கள் அனைவரும் குலதெய்வங்களின் அருள்பெறவும், குரு மகான்களின் ஆசி பெறவும், வாழ்வில் ஏற்படும் பலவிதமான தடைகளும் நீங்க கீழ்கண்ட 16 யாகங்கள் 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.
யோகம் தரும் யாகங்கள்Tamil version