

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 06.03.2020 காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சுயம்வர கலாபார்வதி யாகம், நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு 27 வகை திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் வருகிற 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் மஹா சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகளும் நடைபெற்றது.
இதில் மங்கள இசை, கோ பூஜை, புன்யாஹவாசனம், விநாயகர் பூஜை, யாகசாலை பூஜை, பாராயணங்கள் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் நெல்லிப்பொடி, சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், குங்குமம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், கரும்புசாறு, தேன், மாதுளம் பழம் சாறு, எலுமிச்சம் பழம் சாறு, பஞ்சகவ்யம், புஷ்ப தீர்த்தம், சொர்ண தீர்த்தம், அன்னம், குங்குமப்பூ, வேப்பிலை பொடி, நவதானியம், சீக்காய்ப்பொடி, மூலிகைகள், நெய், நல்லெண்ணெய், இஞ்சி, வெற்றிவேரு போன்ற 27 விதமான திரவியங்கள் சேர்க்கப்பட்டது. இதில் ஏராளமானவர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.