

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கி வருகிற 31.12.2020 வரை யாகத்திருவிழாவாக ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் காரியசித்தி பெறவும் நடைபெற உள்ளது. இந்த யாகத்திருவிழாவில் வருகிற 18.01.2020 முதல் 25.01.2020 வரை கீழ்கண்ட யாகங்கள் நடைபெறுகிறது.
18.01.2020 சனிக்கிழமை - இயற்கை சீற்றம் குறைய - ஸ்ரீ அஷ்டவசுக்கள் யாகம்.
19.01.2020 ஞாயிற்றுக்கிழமை - தரித்திரம் நீங்க - ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம்.
20.01.2020 திங்கள்கிழமை - தம்பதிகள் சந்தான பாக்யம் பெற - ஸ்ரீ தத்தாத்ரேயர் ஹோமம்.
21.01.2020 செவ்வாய்கிழமை – உலக நலன் கருதி, சகல ஐஸ்வர்யம் கிடைக்க – ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம்.
22.01.2020 புதன்கிழமை – ஐஸ்வர்யம் பெருக – ஸ்ரீ ரங்கநாதர் ஹோமம்.
23.01.2020 வியாழக்கிழமை – களத்திர தோஷம் நீங்க – ஸ்ரீ சுக்கிர கிரக சாந்தி ஹோமம்.
24.01.2020 வெள்ளிக்கிழமை – குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் விலக, மாங்கல்ய பலம் பெற – சர்வ சக்தி யாகம்
25.01.2020 சனிக்கிழமை – சனி கிரக தோஷங்கள் நீங்கவும், ஆயுள் பலம் கூடவும் – சனி சாந்தி ஹோமம்.
மேற்கண்ட யாகங்களில் அந்தந்த தேவதைகளுக்குரிய பழங்கள், புஷ்பங்கள், மூலிகைகள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.