

பரமேஸ்வரன் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீ மஹா பைரவர் மூர்த்தியை உற்பத்தி செய்து அவரிடம் உலகினை காக்கும் பொறுப்பினை அளித்து அசுரர்கள் தொல்லை அதிகரிக்கும்பொழது சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வெல்வதாக புராணங்கள் மூலம் அறிய முடிகிறது.
சகல உலகங்களையும் அதில் அமைந்துள்ள, ஆலயங்களையும், தீர்த்தங்களையும் காவல் புரிபவர் ஸ்ரீ பைரவர் ஆவார் ஷேத்திரங்களைக் காவல் புரிவதால் அவர் ஷேத்ரபாலகர் கடல் முதலான பெரிய நீர்ப்பகுதிகள் பொங்கி பூமியை அழித்தி விடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதால் தீர்த்த பாலகர் என்றும் மக்களிடம் அறிவு சுடரை வளர்ப்பதால் ஞான பைரவர் என்றும், யோகங்களை அள்ளித்தருவதால் யோகபைரவர் என்றும், யோகிகளுக்கு காவலாக இருப்பதோடு மகா வீரர்களிடம் உக்ர பைரவராகவும், பஞ்ச பூதங்களினால் உண்டாகும் சீற்றங்களில் இருந்து காக்கும் பூத பைரவராகவும் இன்னும் பல்வேறு வடிவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றார். பைரவர் உக்கிரமான தேவராக விளங்கினாலும் பெருங்கருணை மிக்கராவார். சிவாலயங்களில் பைரவர் வழிபாடு ஓர் அங்கமாக உள்ளது. வேத, இதிகாச, சைவ, சாக்த, கௌமார, சௌர மார்க்கங்களிலும் ஜைனம், பௌத்தம் முதலான பிற மார்க்கங்களிலும் பைரவரை சிறப்புடன் போற்றுகின்றனர். பைரவர் மந்திர யந்திர தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர். இவரே சனீஸ்வர பகவானின் குருவாகவும் விளங்குகிறார். பைரவரை வணங்குவதால் ஏழரை நாட்டு சனி, ஜென்மச்சனி, அர்த்தஷ்டம சனி, அஷ்டம சனி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். பைரவரை வழிபட்டால் எல்லா சகல சம்பத்துகளையும் பெறலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இத்தனை சிறப்புமிக்க பைரவருக்கு 74 குண்டங்களில் 74 சிவாச்சாரியர்கள் அமர்ந்து 74 பைரவர் ஹோமம் நடைபெற்ற மஹாபீடம் என்று அழைக்கப்படும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 08.04.2018 ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை க்ருஷ்ண பக்ஷ தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா பைரவருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும் மற்றும் 64 பைரவருக்கும் 64 குண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீ சக்ரத்தில் நித்யவாசம் செய்யும் பராம்பிகையைச் சுற்றி வீற்றிருக்கும் 64 யோகினிகளுக்கு சிறப்பு பூஜைகள் சென்னை சாக்த ஸ்ரீ பரணிகுமார் அவர்கள் நிகழ்த்த உள்ளார்.
ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களான 1. ஸ்ரீ அசிதாங்க பைரவர், 2. ஸ்ரீ ருரு பைரவர், 3. ஸ்ரீ சண்ட பைரவர், 4. ஸ்ரீ குரோதன பைரவர், 5. ஸ்ரீ உன்மத்த பைரவர், 6. ஸ்ரீ கபால பைரவர், 7. ஸ்ரீ பீக்ஷன பைரவர், 8. ஸ்ரீ சம்ஹார பைரவர் மற்றும் மஹா பைரவருக்கும். 64 பைரவர் 64 யோகினிகள் பூஜை கணபதிபூஜை, குரு மண்டல பூஜை, 64 பைரவர் சகித 64 யோகினிகள் மூல மந்திர அர்ச்சனை, கட்கமாலா, ஆஸ்ரேய அஷ்டோத்திரம், நவாவரண சக்ரேஸ்வரி த்யானம், லலிதா ஸஹஸ்ர நாமம் என தொடர்ந்து 64 விளக்குகள் ஏற்றி தீபாராதனையுடன் நடைபெற உள்ளது.
மேற்கண்ட மஹா யாகத்திற்கு ஸ்ரீநாராயணதீர்த்தர் என்கிற ஸ்ரீகங்கோத்ரி ஸ்வாமிகள், சத் குரு மாதா அன்னபூரணி, அடிஅண்ணாமலை மாதா புவனேஸ்வரி, காஞ்சீபுரம் லலிதாம்பிகை பீடம் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ பாலானந்த ஸ்வாமிகள், இறையூர் பகளாதேவி பீடம் பீத்தாம்பர ஸ்வாமிகள், அடையார் பாலாபீடம் ஸ்ரீ கணேசன் ஸ்வாமிகள், ஆத்ரேய கோத்திரம் பைரவ ரமணி, மற்றும் அம்பாள் உபாசகர் ஸ்ரீ சங்கரநாராயணன் சென்னை அவர்கள் வருகை புரிய உள்ளார்கள்.
இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version