

Ashtalakshmi Shahitha Shri Lakshmi Narayana Homam and Shri Dhanalakshmi Beejakshara mantra dhana Aakarshana Kodi Jedaignam wil be held on 19.11.2016 & 20.11.2016 at Danvandri Peedam
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில், நிகழும் துன்முகி ஆண்டு கார்த்திகை மாதம் 4ம் நாள் (19.11.2016) சனிக்கிழமை புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 7.30 மணி முதல் 29.11.2016 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்குள்ளாக, காலை மாலை இருவேளையும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி இங்கு பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லட்சுமி குபேரர் சன்னதி மஹா மண்டபத்தில் ஸ்ரீ தனலக்ஷ்மி பீஜாக்ஷர மந்த்ர தன ஆகர்ஷண கோடி ஜபயக்ஞம் நடைபெற உள்ளது.
19.11.2016 சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் கலச பூஜை, கோபூஜை, ஸ்ரீ லட்சுமி கணபதி பூஜை, புண்யாஹவாசனம், வருணஜப பூஜை, ஸ்ரீ அஷ்டதிக்பாலகர் பூஜை, ஸ்ரீ ஆரோக்யலட்சுமி ஸமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் சகல பரிவார மூர்த்திகள் ஆவாஹணம், ஸ்ரீ அஷ்டலட்சுமி, ஸ்ரீ லட்சுமிநாராயணர், நவக்ரஹம், ஸ்ரீ தனலட்சுமி தேவிக்கு ஆவாஹணம் செய்து ஸ்ரீ தனலக்ஷ்மி பீஜாக்ஷர மந்த்ர தன ஆகர்ஷண கோடி ஜபயக்ஞம் ஆரம்பம்.
29.11.2016 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் மஹா பூர்ணாஹுதி நடைபெற்று கலச புறப்பாடு, மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
ஆரோக்யம், ஐஸ்வர்யம், மனசாந்தி, முக்தி கிடைக்க வழிவகை செய்யும். பொருளாதாரம், வழக்கு, வியாஜ்யம், தொழிலில், சுபகாரியங்கள், கல்வி, திருமணம், சந்தானபாக்யம், சௌபாக்யம், குடும்பம் போன்றவைகளில் ஏற்படும் தடைகள் நீங்க வழிவகை செய்யும். மேலும் சகலவிதமான வியாதிகள் நீங்கி 16 செல்வங்களில் உயர்ந்த செல்வமான ஸ்ரீ தனலட்சுமி ப்ராப்தம் போன்ற பல நன்மைகளுடன், ஸ்ரீ தனலட்சுமி கிருபா கடாக்ஷத்துடன் ஸ்ரீ ஆரோக்யலட்சுமி ஸமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர 73 பரிவார மூர்த்திகள், சிவலிங்க ரூபமாக அமைந்துள்ள 468 சித்தர்கள் அருளுடன் அஷ்ட ஐஸ்வர்யமும் பெற்று ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழ அனைவரும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version