

வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் தமிழக ஆளுனர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்து, ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16தெய்வங்களுக் கு திருக்கல்யாணம் நடைபெற்று .இன்று மக்களால் சௌபாக்யபுரியாகவும் , மஹோத்ஸவபு ரியாகவும் , மஹோத்ஸவக்ஷேத்ரமா கவும் , ஔஷதகிரியாகவும் அழைத்தழும் ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும். பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு”டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,ஆசிகளுடன் வருகிற10.04.2019 புதன் கிழமைகாலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீதன்வந்திரி மூலவருக்கு நவகலச திருமஞ்சனமும் நடைபெற உள்ளது.
திருமஞ்சனம் என்றால் என்ன :
திருமஞ்சனம் என்றால் “புனித நீராட்டல்” என்று அர்த்த மாகும். அதாவது இறைவனை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். இதன்மூலம் மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்ததாகும். பெருமாளையும் தாயாரையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். அன்றைய தினம் தன்வந்திரி பீடத்தில் மக்கள் திரண்டு வந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவானை மன நலம், உடல் நலம் வேண்டி குழந்தைகளுடன் பெற்றோர்கள் வந்து வழிபடுவார்கள். அவ்வமையம் பல்வேறு ஆச்சரியங்களை பகவான் நிகழ்த்துகிறார் என்பது வருகை புரியும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அஸ்வினி நக்ஷத்திரம் முதல் ரேவதி நக்ஷத்திரம் வரை 27 நக்ஷத்திரகரர்களின் நலன் கருதியும், மழை வேண்டியும், குழந்தைகளுடைய கல்வி, ஆரோக்யத்தில் முன்னேற்றம் அடையவும், விவசாய நலனுக்காகவும், அம்மை போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் ஆரோக்ய கடவுளை மனம் குளிர்விக்கும் வகையில் பால், தயிர், நெய், பன்னீர், இள நீர் , தேன், கரும்புசாறு, பழசா று , நெல்லி பொடி, முள்ளி பொடி, உலர் திராட்சை பழங்கள், மூலிகை பொடிகள், துளசி தீர்த்தம், புஷ்ப தீர்த்தம், பஞ்சாமிர்தம் போன்ற விதம் விதமான பொருட்களால் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனம் தன்வந்திரி ஹோமத்துடன் புஷ்பாஞ்சலியும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இவ்வைபவத்தை நேரில் கண்டுகளிப்பது மூலம் ஏராளமான பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.