

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் 09.03.2020 திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி ஆலய புனர் பிரதிஷ்டை நடைபெற்றது. மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமமும், பெண்கள் திருமணத்தடை நீக்கும் சுயம்வர கலாபார்வதி யாகமும், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும் நடைபெற்றது.
இதில் மங்கள இசை, கோ பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ விநாயாகர் தன்வந்திரிக்கு விசேஷ ஹோமங்களும் மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விசேஷ ஆராதனையும் மங்களார்த்தியும் நடைபெற்றது. தொடர்ந்து திருமணத்தடை நீக்கும் ஹோமங்கள் நடைபெற்று பங்கேற்ற ஆண் பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மேலும் சந்தான கோபால யாகம் நடைபெற்று ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தம்பதிகளுக்கு ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்த வெண்ணெயும் உளர் பழங்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இத்தகைய வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.