

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 04.03.2020 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதி ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஹோமத்துடன் 11 திரவியங்களை கொண்டு ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
இதில் மங்கள இசை, கோ பூஜை, விநாயகர் பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்று 11 சிவாசாரியர்களால் 11 முறை ருத்ர பாராயணம் நடைபெற்று ஏகாதச ருத்ர ஹோமம் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிருதம், வில்வதீர்த்தம், கரும்புசாறு, போன்ற 11 வகையான திரவியங்களை கொண்டு ருத்ராபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்த பக்தர்கள் அப்போத்து நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.