

சமீபத்தில் 10,000 பாக்ய சூக்த ஹோமத்துடன் 36 ஹோமங்கள் நடைபெற்ற வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 05.03.2018 திங்கட் கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கடம் தீர்க்கும் சங்கடஹர கணபதி ஹோமமும், விநாயக தன்வந்திரிக்கு மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது. 06.03.2018 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வளமான வாழ்வு வாழவும் வாஸ்து தோஷம் நீங்கவும் ஸ்ரீ வாஸ்து ஹோமமும் வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு ருண-ரோக-சத்ரு தோஷம் நீங்க ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமமும் கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு திருமஞ்சனமும், 07.03.2018 புதன் கிழமை மற்றும் சஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சகல தோஷங்கள் நீக்கும் சுதர்சன யாகத்துடன் சத்ருபயம் நீக்கும் சத்ரு ஸம்ஹார ஹோமமும் சக்கிரத்தாழ்வார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version