

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து ஹோம பூஜைகளில் கலந்து கொள்பவர்கள் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றி பெறலாம்..
"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
யாகத்தில் கரும்பு, அருகம்புல், நெல்பொரி, அவல், வறுகடலை, கொப்பரை, வெல்லம், எள், நெய், வெண்பட்டு போன்றவை சேர்க்கப்பட உள்ளது.
ஹோமத்தின் பலன்கள் ஹோமத்திலும் அபிஷேகத்திலும் சிறப்பி பூஜையில் பங்பேற்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இந்த யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்கிறார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version