

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலைஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம்ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று 15.03.2019 பங்குனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை நிம்மலக்ஷ்மி – அஸ்வத் ராஜா (வேப்ப மரம் – அரச மரம்) திருக்கல்யாணமும், 108தம்பதி பூஜையும் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நடைபெற்றது.
இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின்அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும்நிம்மலக்ஷ்மி – அஸ்வத் ராஜா (வேப்ப மரம் – அரசமரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்துவிளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் – பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்த்கொண்டுமகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜையும் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு ஸ்வாமிகள் ஆசிகளுடன் பாதபூஜை செய்து, புது வஸ்திரத்துடன் மங்கள பொருட்கள் அளித்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் திருவளம் திரு. சாந்தா ஸ்வாமிகள், திருவேற்காடு திரு. ஆனந்த் ஸ்வாமிகள், திருவண்ணாமலை அக்ஷய சாயிபாபா கோவில் நிறுவணர் திரு. ரவிசந்திரன் பாபா, நீதியரசர் திரு. ஜெகதீசன் அவர்கள் குடும்பத்தினர், திரு. கவி முரளிகிருஷ்ணன், வேலூர் மாவட்ட சுகாதார இயக்குனர், இராணிபேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர், பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். மேலும் பங்கேற்றபக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.
இதனை தொடர்ந்து நாளை 16.03.2019 பங்குனி மாதம் 2ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரைநோய் நொடிகள் நீங்கவும், ஆரோக்யமான வாழ்கை வாழவும், பயங்கள் அகலவும், குடும்பங்கள் மேன்மைஅடையவும், மனரீதியான நோய்களிலிருந்து விடுதலை பெறவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக600க்கும்மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞ்சர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியுடன் ஸ்ரீஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகத்துடன் சஹஸ்ர கலச திருமஞ்சனம்நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மேதகு தமிழக ஆளுனர் அவர்கள் நண்பகல் 12.00 மணியளவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். மெலும் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாசருடைய பரிபூரண அருள் வேண்டி மாலை 5.00 மணி முதல்7.30 வரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சதுர்வேத பாராயணத்துடன் நடைபெறுகிறது..இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version