

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நேற்று 04.10.2018, வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை, வாக்கிய பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.
அனுக்கிரக குரு பகவான் :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் என்ற பெயர்களுடன் 468 சித்தர்கள் மற்றும் 75 விதமான பரிவார மூர்த்திகளுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்ற ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ வல்லலார், காஞ்சி மஹாபெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், சீரடி சாயிபாபா சன்னதிகள் அருகே, குரு பீடத்தில் குருபகவான் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்யும் வகையில் அனுக்கிரக தக்ஷிணாமூர்த்தியாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்தில் காண முடியாத தனிச்சிறப்பாகும்.
மேற்கண்ட அனுக்கிரக குருபகவானுக்கு நேற்று வியாழக்கிழமை குரு பெயர்ச்சியை முன்னிட்டு மஞ்சள் நிற ஆடையும், சரக்கொன்றை, முல்லை மலர்கள் கொண்டு மஹாயாகமும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும் செய்து அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் இராசி நேயர்கள் குருபுத்தி, குருதிசை, அன்பர்கள் யாகத்தில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பங்கேற்ற பக்தர்களுக்கு யாகத்தில் வைத்திய குருவும் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் யந்திரம், டாலர், மற்றும் புகைப்படம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வள்ளலாரின் 196 ஆவது ஜெயந்தி விழா :
இதனை தொடர்ந்து இன்று 05.10.2018 வள்ளலாரின் 196 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள வள்ளலார் சன்னதி முன்பு வள்ளலார் மூலமந்திர ஹோமமும், வள்ளலார் விக்கிரகத்திற்கு சிறப்பு ஆபிஷேகமும் நடைபெற்றது. ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடிகொண்டு நவகலச திருமஞ்சனம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. மேற்கண்ட வைபவங்களில் நிறைய பக்தர்கள் பங்கேற்று பயன் பெற்றனர். நாளை 06.10.2018 மாலை 5.00 மணியளவில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வர்ருக்கு ருத்ர ஹோமத்துடன் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version