Kaala Sharpa Dhosa Pariharam

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 24.10.2016 அன்று திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில்ஆயில்ய நட்சத்திரத்தன்று சிறப்பு கால சர்ப தோஷ பரிஹார ஹோமம், நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபெறும்.இந்த ஹோமத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று ஆசீர்வதிக்க உள்ளார்.

இராகு கேது தோஷம் அகலவும், நாக தோஷம் சர்ப தோஷம் விலகவும், ராகுபுக்தி ராகுதிசையினால் ஏற்படும் தடைகள் அகலவும், திருமணம் குழந்தைபேறு அமையவும் மேலும் ஒருவருடைய வாழ்க்கையில் இருந்து வரும் குடும்ப பிரச்சனைகள், நாள் பட்ட வியாதிகள், வியாபாரத்தில் வரும் இடையூறுகள், சகோதர, சகோதரிகளுக்குள் உள்ள மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பெற, ஒருவருடைய வேலை அல்லது செய்யும் தொழில் மந்தமில்லாமல் சீராக நடைபெற, வீடு அல்லது வாகனங்கள் மூலமாக வரும் தொல்லைகளிலிருந்து விடுபட, தந்தையுடன் இருந்து வரும் மனக் கசப்பு நீங்கி சுமுக உறவு நிலவ, குடும்ப கஷ்டங்கள் இன்றி வளம் பெற மற்றும் எந்த காரியமும் தடைகள் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெற இந்த கால சர்ப தோஷ பரிஹார ஹோமம் செய்வதால் பலன் கிடைக்கும்.

இந்த ஹோமத்தில், பலவகையான மூலிகைகள், பழங்கள், திரவியங்கள், பால், தயிர், பூக்கள், பட்டு வஸ்த்திரங்கள் அகிய அனைத்து பொருட்களும் உபயோகப்படுத்தப்படும். இந்த ஹோமத்தில் பங்கு பெற்று தோஷ நிவர்த்தி செய்து வாழ்வில் வளம் பெற வேண்டுகிறோம்.

தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images