

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 73 க்கும் மேற்பட்ட தெய்வங்களும், 468 சித்தர்களையும், பெற்றோர்களுக்காக ஆலயத்தையும் அமைத்து நாள் தோறும் பல்வேறு வகையான ஹோமங்கள் உலக நலனுக்காக ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தி வருகிறார்.
உலகத்திலேயே முதன் முறையாக 4 அடி உயரத்தில் 16 கைகளுடனும், சுதர்ஸன சக்கரத்துடனும், காலில் ஷூ அணிந்தும், கையில் கத்தியுடனும் கம்பீரமான மீசையுடன் ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர்க்கு ,சகஸ்ராஜுனர் என்ற பெயருடனும் பச்சை கல்லிலான இந்த சிலையை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் காவல் தெய்வமாகவும், சுதர்ஸன பெருமாளாகவும், மஹாவிஷ்ணுவாகவும், மஹாராஜாவகவும் போற்றப் படுகிறார்
வருகிற ஞாயிற்றுக் கிழமை 18/09/2016 அன்று காலை 10 மணியளவில் தமிழ் நாட்டிற்க்கு நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைப்பதற்க்காக இழந்த பொருளை மீட்டுத் தரும் கடவுளான ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர்க்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெற உள்ளது. அது சமயம் தமிழக விவசாயிகளுக்காகவும், கன்னட வாழ் தமிழர்களுக்காகவும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலமையில் கூட்டு ப்ரார்த்தனையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version