

இன்று 16.11.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் அகில உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நலன் கருதி 9 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி யக்ஞம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசிகளுடன் நடைபெற்றது.
ஸ்ரீ வேத வ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்களுடைய க்ஷேமம், அவர்களின் குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக இன்று 16.11.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜையுடன். மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், விக்னேஸ்வரபூஜை, கணபதியக்ஞம், நவக்ரஹ யக்ஞம், ஸ்ரீமந் நாராயண யக்ஞம்,(ஜனார்தன யக்ஞம்), ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ காலபைரவர் ஹோமத்துடன் ஒரு கோடி குபேர ஜப ஹோமத்தின் மூன்றாவது நாள் நிகழ்ச்சியும், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புரோகித சங்க தலைவர் வேலூர் திரு. சீதாராமன் அவர்கள், பொருளாளர் திரு. கோபாலன், உப தலைவர் திரு. கீ. எல். கிருஷ்ண மூர்த்தி அவர்கள், வேலூர் பா. சேகர், பி. ஆர். கணேஷ், சிதம்பரம் குஞ்சிதபாகம் மற்றும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு யாகத்தில் பிராத்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version