

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி நேற்று 14.11.2018 புதன்கிழமை முதல் இன்று 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெற்றது.
இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகத்தில் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டும் நவதான்யங்கள், நவமூலிகைகள் கொண்டு நவக்கிரக ஹோமமும், நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version