

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று24.10.2018 புதன்கிழமை ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீமரகதாம்பிகை சமேத மரகதேஸ்வர் மற்றும் ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும், குழந்தை வரம் வேண்டி சந்தான கோபால யாகமும், ஆண் பெண் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கோடி ஜப மஹா தன்வந்திரி யக்ஞத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோடி ஜப வேள்வி 95 ஆவது நாளான இன்று ஆற்காடு ஸ்ரீமஹாலக்ஷ்மி மகளிர் கல்லூரியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு உலக நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும், ஆரோக்யம் வேண்டி தன்வந்திரி கோடி ஜப வேள்வியில் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்ட்து. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version