

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்றாலே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்றுதான் அனைவரின் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது எனலாம். ஆரோக்ய பீடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானான நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஆரோக்ய லக்ஷ்மி தாயாருக்கும், இதர 75 பரிவார மூர்த்திகளுக்கும் பக்தர்களின் தேவைகளுக்காக நிவர்த்திக்காக யாகங்கள், ஜபங்கள் வைபவகமாக அனுதினமும் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு கோடி ஜப யக்ஞமும், அர்ச்சனையும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் மாபெரும் கோடி ஜப ஹோமம் சென்ற 19.07.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்று வருகிறது.
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து பயன்களையும் பெற நடைபெறும் இந்த யாகம் நாளை 28.10.2018 ல் 100 நாட்கள் நிறைவுபெறுகிறது. இந்த மஹாபூர்ணாஹுதி பல்வேறு மஹான்கள் மற்றும் பக்தர்கள், மாணவ மாணவிகள் முன்னிலையில் காலை 11.30 மணியளவில் நடைபெற்று ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மிக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழக்கின்றோம். சென்ற மூன்று நாட்களாக ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி, லக்ஷ்மி லோகநாதன் பள்ள, வாலாஜா வி.கெ.வி. பள்ளி, ஸ்ரீ நாராயண வித்யாலயா பள்ளி, ப்ரைட் மைண்ட்ச் வித்யோதயா பள்ளி, காவேரிப்பாக்கம் கலைமகள் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்ற பல்வேறு பள்ளிகளிலிருந்து 2000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு யாகத்தில் மூலிகைகளை சேர்த்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ தன்வந்திரி புகைப்படவும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version