Koti Japa Yagnam

ஸ்ரீ தன்வந்திரி பகவான்

உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். அவை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும். தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார். ஸ்ரீதன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

பாற்கடலில் தோன்றியவரே ஸ்ரீ தன்வந்திரி :

திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு,சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். அல்லவா ?

ஸ்ரீ ரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர்

இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீ ரங்கநாதருக்கு வைத்தியம் பாத்தவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீமன் நாராயணன்.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடம்

மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனை

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி, மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தரும் இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தன்வந்திரி பகவான் வைத்தியராக இருப்பதாலும், மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவ மனையாக அமைந்துள்ளதாலும், நோயாளிகள் பலரும் அவரிடம் வைத்தியம் பார்க்க வருகிறார்கள் என்பதால் இங்கு அர்ச்சனை கிடையாது. யாகம் மட்டுமே பிரதானமாக திகழ்கிறது.

நோய் தீர்க்கும் தன்வந்திரி மந்திரம்
ஓம் நமோபகவதே வாசு தேவாய தன்வந்தரயே
அம்ருத கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய

ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:

இதன் பொருள்: எல்லோருக்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருப்பவரும், சகல நோய்களை தீர்க்க மூவுலகத்தை காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்திரி கடவுளே உன்னை வணங்குகிறேன். எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்கு தெரியாமல் நீக்குவாயாக, என்பதாகும்.

நோயற்று வாழட்டும் உலகு :

"நோயற்று வாழட்டும் உலகு

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images