

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.06.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் ஆனி கிருஷ்ண பட்ச த்வாதசி திதி கூர்மஜெயந்தியை முன்னிட்டும். மகா விஷ்ணுவை வழிபட உகந்த தினத்தன்று மாபெரும் ஸ்ரீ கூர்ம ஹோமமும் கூர்ம பெருமாளுக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது
கூர்ம அவதார ஜெயந்தி பலன்
ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி வழிபாடு மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம்.. ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது.
அவதாரத்திருநாள் மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.
ஓம் தராதராய வித்மஹே ஓம் லோகாத்யக்ஷ