

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்றோருக்காக அமைத்துள்ள தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.08.2016 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி முதல் வரலட்சுமி விரதம்,ஆடி வெள்ளியை முன்னிட்டு துவங்கி 17.08.2016 புதன் கிழமை மாலை பௌர்ணமி வரை உலக நலன் கருதியும் உலக மக்களின் உடல்நலம் மனநலம் வேண்டியும், வாழ்வில் வளமும் நலமும் பெறுவதற்கும் கீழ்கண்ட பலன்களை பெறுவதற்க்கும் இந்த நிவாரண ஹோம வழிபாடு நடைபெறுகிறது.
இயற்கைச் சீற்றம், பேரிடர்கள், கடல் கொந்தளிப்பு போன்ற பேராபத்துகளிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், உலக மக்களின் தேவைகளான திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நிரந்தர உத்தியோகம், கல்வி, குடும்ப க்ஷேமம், கடன் நிவாரணம், நோய் நிவாரணம், மன அமைதி, மன சாந்தி, ஆடை அணிகலன்கள் போன்றவற்றைப் பெறவும், துர் மரணம், விபத்துக்கள், வறுமை போன்றவற்றைத் தவிர்க்கவும், கொடிய வியாதிகளால் துன்பம் ஏற்படும்போதும், கிரகங்களின் பெயர்ச்சியினாலும் சுழற்சியினாலும் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும், வழக்குகளில் வெற்றி பெறவும், சொத்து பிரச்னைகள் தீரவும், தம்பதிகளின் ஒற்றுமை, தாம்பத்ய அந்யோன்யம் வேண்டியும், சகல பாபங்களிலிருந்து விடுதலை பெறவும், சகல காரிய ஸித்தி அடையவும், லட்சுமி கடாட்சம் குறைவில்லாமல் இருக்கவும், இளைய தலைமுறையினரின் ஆரோக்கியம் கருதியும், நல் பழக்க வழக்கங்கள் வளரவும், அவர்களிடம் பாசம், நேசம், பக்தி போன்றவை சிறக்கவும் இத்தகைய ஹோமங்கள் மாபெரும் தூண்டுகோல் சக்தியாக அமையும்.
நல்வாழ்க்கை நாம் வாழ்வதற்கு தர்ம சிந்தனை, பொறுமை குணம், சகிப்புத் தன்மை போன்றவை எப்படி அவசியமோ, அதுபோல் இறை வழிபாடும் அவசியம் தேவை.
இறை பக்தி இல்லாத வாழ்க்கை, நிலவில்லாத வானம் போல்! மீன் இல்லாத கடல் போல்! அப்படிப்பட்ட வாழ்க்கையை & அதாவது இறை பக்தி இல்லாத ஒரு வாழ்க்கையை ஒருவர் வாழ நேர்ந்தால் அதனால் எந்தப் பலனும் அவருக்கு இல்லை.
கடந்த பிறவியில் செய்துள்ள நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப, ஒவ்வொரு ஜீவனும் அதற்குரிய பலன்களை இந்தப் பிறவியில் அனுபவிக்க வேண்டும். அதன்படி அனுபவித்து வருகின்றன. இது நியதி. என்றாலும் & ஈடில்லாத இறை பக்தியினாலும், தயாள குணத்தினாலும், வாழுகின்ற முறையினாலும் தீவினைகளின் கெடுபலன்களை ஓரளவு குறைத்துக் கொள்ள முடியும். இது சர்வ நிச்சயம்.
எனவே, வாழுகின்ற இந்தக் காலத்தில் நாம் அனுபவிக்க வேண்டிய தீவினைகளை ஓரளவு குறைப்பதற்கு இறைவனை வழிபட்டே ஆக வேண்டும். அவனது அருளுக்குப் பாத்திரம் ஆக வேண்டும். எங்கும் நிறைந்துள்ள இறைவனை நாம் வழிபடுவதற்குப் பல முறைகள் உள்ளன.
சங்கீதம், நாம கோஷம், அர்ச்சனை, அபிஷேகம், ஜபம் & இப்படிப் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒரு வழிபாட்டு முறை & ஹோமம் செய்வது.
ஹோமங்கள் மூலமாக நமது பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஹோமங்களில் ஒரு தூதுவராகச் செயல்படும் அக்னி பகவான்தான் நமது கோரிக்கைகளை & எந்தெந்த தேவதைகளுக்கு வைக்கிறோமோ & அந்தந்த தேவதைகளிடம் கொண்டு போய் சேர்ப்பிக்கிறார்.
எனவேதான், வாலாஜாவில் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் துவங்கிய காலத்தில் இருந்தே ஹோமங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அக்னி பகவானின் வாசம் இல்லாத நாளே இங்கு இல்லை. தினம்தோறும் ஹோமங்கள். தங்களுக்கு நேர்ந்த பல விதமான பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டி, இந்த ஆரோக்ய பீடம் தேடி வருகிறார்கள். ஸ்ரீதன்வந்திரி பகவானை வணங்குகிறார்கள்.