

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சிவராத்திரியை முன்னிட்டு வருகிற04.03.2019 திங்கள்கிழமை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிவ பஞ்சாக்ஷர ஹோமத்துடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 320 ஜீவ சமாதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சித்தர்களை தரிசித்து அப்புண்ணிய பூமியின் புனித ம்ருத்தியை கொண்டு 15 நாட்கள் ருத்ர ஹோமம் செய்து சிவ யந்திரத்துடன் 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்து பிரதி அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி,பிரதோஷ காலங்களில் யாகங்கள், பூஜைகளை சிறப்பாக செய்து வருகிறார்.
மேலும் மரகதலிங்கம், வள்ளலார், மகா அவதார பாபா, சீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர், குருநானக், குழந்தையானந்தா சுவாமிகள், ஸ்ரீ வீரபிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களையும் பிரதிஷ்டை செய்து சித்தர் முறையில் பூஜித்து வருகிறார்.வருகிற மஹா சிவராத்திரி 04.03.2019திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்கள் நலன் பெறவும் இயற்கை வளம் பெறவும் சிவ பஞ்சாட்சர ஹோமமும், ருத்ராபிஷேகமும், ருத்ர பாராயணமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு விவாஹ பிராப்தம், சந்தான பாக்கியம், நல்ல நட்புகள், வறுமை நீங்கி வளமை, குரல் வளம், இனிய சரீரம், நல்விளைச்சல்,தொழில், வணிகம், வியாபாரம் பெருகும் மற்றும் பலவிதமான சாபங்களும் தோஷங்களும் அகலும். இது மோட்சம் கிடைக்க வழிவகை செய்யும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
Tamil version