

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலைஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம்ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று 14.03.2019 மாசி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல்1.00 வரை துளசி தேவி – நெல்லிராஜா ( துளசி செடி – நெல்லி செடி) திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜையும், வடுக பூஜையும், பைரவர் பூஜையும் நடைபெற்றது. அகில இந்திய துறவியர் சங்க செயலர் ஸ்வாமி ராமானந்தா, பொருளாளர் ஸ்வாமி வேதாந்த ஆனந்தன், திரு. வடபாதி சித்தர், தொழிலதிபர் திரு. வேலாயுதம், வடலூர் சாது மோகன் ஸ்வாமிகள், பவானி ஸ்வாமி ஞானானந்தபுரி அவர்கள் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. S.A. ராமன் I.A.S. அவர்கள் இதில் பங்கேற்ற குழந்தைகள், மாணவ, மாணவிகள் தேர்வு பயமின்றி எழுதவும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று கூறி ஆசீர்வதித்தார்.
மேலும் D.R.D.A. பிராஜக்ட் டைரக்டர் திரு. பெரியசாமி, ரூரல் டெவலப்மெண்ட் எக்ஸிக்யூடிவ் இஞ்சினியர் திருமதி. மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. சாந்தி, அனந்தலை ஓவர்சீர் திருமதி. மாலினி, உதவி பொரியாளர் திரு. ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் திரு. ஏழுமலை, அவர்கள் கலந்துகொண்டனர். மேலும் பங்கேற்றபக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நாளை 15.03.2019 பங்குனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 2.00வரை இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராமதேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலக்ஷ்மி – அஸ்வத் ராஜா(வேப்ப மரம் – அரச மரம் ) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும்,குடும்பங்கள் சிறந்து விளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் – பெண்கள் ஒருவரை ஒருவர்புரிந்த்கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜை நடைபெறுகிறது. இந்த தகவலைதன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version