

ஆடி மாதம் என்றாலே ஆலயங்களிலும் வீடுகளிலும் தெய்வ வழிபாடு அமர்க்களமாக இருக்கும்.இந்த மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்று சொல்லப்படும் சர்ப்ப வழிபாடு எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெறும். இந்த வழிபாட்டு முறை, காலம் காலமாக நடந்து வருகிறது.நாம்முற்பிறவியில் செய்த பாவங்களால் இந்த பிறவியில் பல துன்பங்களை அனுபவித்து வருகிறோம். புண்ணியம் செய்திருந்தால் இந்த பிறவியில் நல்ல பலன்களை அடைந்து வருகிறோம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இதில் நாக தோஷம் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்லாமலும், பிறந்த குழந்தைகள் ஊனமுற்றதாகவும், நோயால் அவதிப்படுவதும் குடும்பத்தினர் பிரிந்தும் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவர். இந்த துன்பங்களிருந்து மீளவும், நல்ல பலன்களை பெறவும் நாக தேவதைகளை மனம் உருகி வழிபட வேண்டும். நாக தேவதைகளின் அருளால் தோஷங்கள் விலகி நல்ல பலன்கள் பெற வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தி உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற ஜீலை 27 வியாழக்கிழமை ராகுகேது பெயர்ச்சி யாகமும் ஜீலை 28ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10.00 மணியளவில் நாக பஞ்சமியை முன்னிட்டு நாக தோஷ நிவர்த்தி ஹோமம் என்கிற காலசர்பதோஷ நிவர்த்தி ஹோமமும் கருட பஞ்சமியை முன்னிட்டு அஷ்ட நாக கருடமூல மந்திர ஹோமமும், வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமத்துடன் சந்தான கோபால யாகமும் வளர்பிறைபஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாஸ்து ஹோமமும் நடைபெறுகிறது.
மேலும் ஜீலை 23 முதல் 30 வரை நடைபெறும் ஸகஸ்ர சண்டியாகத்திலும் கலந்து கொண்டு மேற்கண்ட தோஷங்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ளலாம்.