

விபத்து நோய் நீக்கும் மருத்துவராகவும், பஞ்ச பக்ஷியின் ராஜாவாகவும் திகழும் ஸ்ரீ கருட பகவானுக்கு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு இன்று 05.08.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அஷ்டநாக கருடனுக்கு தேன் அபிஷேகம், நாகர் ஹோமம், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றது.
ஆடி அமாவாசைக்குப் பிறகு வளர்பிறை பஞ்சமி திதி அன்று கடைபிடிக்கப்படும் முக்கியமான விரதம் கருடபஞ்சமிநாளான இன்று குழந்தை வரம் வேண்டியும், ஆண் பெண் திருமணம் வேண்டியும், மேலும் நற்பலன்கள் பெறவும்நாகரையும், கருடனையும் வேண்டி நடைபெற்ற மேற்கண்ட யாகங்களிலும் அபிஷேக ஆராதனைகளிலும்ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். இந்த யாகங்களில் நெய், தேன், விசேஷ மூலிகைகள், நவதானியங்கள், மஞ்சள், நிவேதன பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ அஷ்ட நாக கருடருக்கு தேன் அபிஷேகமும், ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு பால், மஞ்சள் தீர்த்த அபிஷேகமும் நடைபெற்று விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் நாக தோஷம் நீங்குவதற்கும், பக்ஷி தோஷங்கள் அகல்வும், வாகன விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும்,ராகு கேது கிரங்கள் மற்றும் பிற நாக தோஷங்கள் விலக வேண்டியும், திருமணம், குழந்தைப்பேறு கிடைக்க வேண்டியும், பாவங்கள், நோய்கள் அகலவும், குடும்ப நலம், தைரியம் ஏற்படவும், எதிரிகள் தொல்லை அகலவும்,நீண்ட ஆயுள், பணவரவு ஏற்படவும், ஸர்ப்ப தோஷம், மரண பயங்கள், புத்தி பேதலிப்புகள், சர்ம வியாதிகள்- ஆறாத புண்கள்- கட்டிகள் விலகவும், துர் ஆவிகள் பாதிப்புக்களில் இருந்து விலகவும், இரத்த புற்று நோய், எலும்பு புற்று நோய், போன்ற பலவிதமான புற்று நோய்கள், பித்ரு, பிரம்ம ஹத்தி தோஷங்கள், பரம்பரை பரம்பரையாக வரும் பூர்வ தோஷங்கள், கால சர்ப தோஷங்கள், பில்லி, சூன்யம், ஏவல், சத்ரு தொல்லைகள், குடும்பத்தில் சுபிட்சம் உருவாகவும், பிறக்கும் குழந்தைகள் அறிவும் வீரமும் உடையவர்களாக விளங்கவும், ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.