

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நவக்கிரக தோஷங்கள் அகல “நவக்கிரக ஹோமத்துடன் காலசக்கர பூஜை” நடைபெறுகிறது.
நமது வாழ்வில் 9 கிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. வேத ஜோதிடப்படி நவம் என்றால் ஒன்பது என்றும், கிரஹ என்றால் கோள்கள் என்றும் பொருள். ஒருவர் பிறக்கும் பொழுது காணப்படும் கிரக நிலைகள் தான் அவருடைய வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்தம் செயல் மற்றும் விளைவுகளை நிர்ணயிக்கின்றன என்பது ஜோதிட விதியாகும் என்கிறார் யக்ஞஸ்ரீ. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நவகோள்களின் அனுக்கிரகத்தைப் பெற நவக்கிரக ஹோமம் மிகவும் முக்கியமானது. அவரவரின் கர்ம வினையைப் பொறுத்து தான் அவரது ஜாதகத்தில் 9 கிரகங்களின் நிலை காணப்படும். அதன் அடிப்படையில் தான் வெற்றி தோல்வி காணப்படும். சில சமயங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் தோஷம் காரணமாக வாழ்வில் இடையூறுகள் ஏற்படும்.
ஒன்பது கிரகங்களை திருப்தி படுத்தும் விதத்தில் யக்ஞஸ்ரீ. ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம் தோஷங்கள் குறையும். வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் இடையூறில்லாத வெற்றிகளை பெற முடியும் என்கிறது ஜோதிட சாஸ்த்திரங்கள்.
நவக்கிரக ஹோமம் – காலசக்கர பூஜை பலன்கள் :
நவ கலசங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள், மற்றும் நவ மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தின் மூலம் துன்பங்கள் குறையும். தடைகள் விலகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி. அதிர்ஷ்டங்கள் மற்றும் நன்மைகள் பெறலாம். நவக்கோள்களின் அனுக்கிரகம் கிடைக்கும். வெற்றிகரமான வாழ்க்கை அமையும். மன அழுத்தம் குறையும். செயல்திறன் கூடும். வாழ்க்கையில் வளர்ச்சி. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி. கல்வியில் வெற்றி. நீண்ட ஆயுள். செல்வ செழிப்பு. தொழிலில் முன்னேற்றம். இயற்கை வளம் போன்ற பல்வேறு பலன்களை பெறலாம்.
மேற்கண்ட யாகத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலசக்கரமாக அமைத்துள்ள 27 நக்ஷத்திர, 9 நவக்கிரக விருட்ஷங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version