

இப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 10.04.2019 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனம் கீழ்கண்ட விசேஷ திரவியங்களை கொண்டு நடைபெற உள்ளது.
மேற்கண்ட திருமஞ்சனம் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் ரேவதி நக்ஷத்திரம் வரை 27 நக்ஷத்திரகரர்களின் நலன் கருதியும், மழை வேண்டியும், குழந்தைகளுடைய கல்வி, ஆரோக்யத்தில் முன்னேற்றம் அடையவும், விவசாய நலனுக்காகவும், அம்மை போன்ற நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் ஆரோக்ய கடவுளை மனம் குளிர்விக்கும் வகையில் 9 விதமான கலசங்களில் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், கரும்புசாறு, பழசாறு, நெல்லி பொடி,முள்ளி பொடி போன்ற 9 விதமான திரவியங்களை கொண்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது. இவ்வைபவத்தை நேரில் கண்டுகளிப்பது மூலம் ஏராளமான பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.