Nigumpala Yagam and Swarna Kala Bhairavar Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதிஅமாவாசையை முன்னிட்டு வருகிற 28.09.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைநிகும்பலா யாகத்துடன் சொர்ண கால பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

அமாவாசையில் நிகும்பலா யாகம் என்பது பிரத்யங்கிரா தேவிக்கு செய்யப்படும் யாகம் ஆகும். இந்த யாகத்தில் மிளகாய் ஆகுதியாக கொடுக்கப்படுகிறது. யாகத்தீயில் இடப்படும் மிளாகாய் காட்டம் ஏற்படுத்துவதில்லை என்பது தனி சிறப்பு.

இந்த யாகத்தில் கலந்து கொண்டால், இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும், புதிய வேலை வாய்ப்பு உண்டாகும், திருமணம், வியாபாரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும்.

ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உலக நலன் கருதி ஒவ்வொரு அமாவாசையிலும் சூலினி ப்ரத்யங்கிராதேவியை வணங்கும் வகையில் 'நிகும்பலா யாகம்' என்று சொல்லப்படும் மிளகாய் வற்றல் யாகம் ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் நடைபெறுகிறது.

மேலும் இதில் சென்னை திருவான்மியூர் குழுவினர் வழங்கும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ தேவி மஹாத்மியம்,ஸ்ரீ நாராயணீயம் பாராயணங்கள் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன்குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மிளகாய் வற்றல், புசணிக்காய், குங்குமம், மஞ்சள், எளுமிச்சம் பழம்,உப்பு, மிளகு, மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள்,பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images