On June 4th, Shani Shanti Homam wil be conducted at Sri Danvantri Arogya Peedam

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்களுடைய அனைத்து விதமான உடற்பிணி மற்றும் உள்ளத்துப் பிணி நீங்க பல்வேறு ஹோமங்கள் மற்றும் மாதம் தோறும் சிறப்பு ஹோமங்கள் பக்தர்களின் தேவைகள் பூர்த்திக்காக நடந்து வருகிறது.அந்த வகையில் சனி தசை, சனி புக்தி, சனி அந்தரம் நடைபெறும் பக்தர்களுக்காகவும், பித்ரு தோஷங்கள், முதியோர் சாபங்கள், கர்மவிணை போன்றவைகளால் ஏற்படும் பாதகங்கள் குறைவதற்காக வருகிற 04.06.2016 ,சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை சனி சாந்தி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு விரைவில் திருமணம், நல்ல தொழில் அமைதல், விபத்து ஏற்படாமல் தடுத்தல், ஆரோக்ய குறை நீக்குதல், பொருளாதார தடை நீங்குதல் ,குடும்பத்தில் கஷ்டநஷ்டங்கள், உடல்நல குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும் வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும் சனிசாந்தி ஹோமத்திலும், சனிதோஷ நிவாரண பூஜைகளிலும் கலந்து கொண்டு பயன் பெறலாம் போன்ற பல்வேறு பலன்கள் பெறலாம்.

சனீஸ்வர பகவான் - நீதிமான்

சனீஸ்வர பகவானை பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால்தான் Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images