

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 07.12.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சனி கிரக ப்ரீதி ஹோமத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சங்காபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகத்துடன் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
வாலாஜாபேட்டை பாதாள சொர்ண சனீஸ்வரர்
ஜெய மங்கள சனீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகள் :
பாரத தேசத்தில் எங்கும் இல்லாத வகையில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 20 அடி அகலம்,27 அடி நீளம், 10 அடி ஆழத்தில், 13 படிகளுடன் பளிங்கு கற்கள் கொண்டு பாதாளத்தில் பிரத்யோகமாக தங்க சனீஸ்வரருக்கு மண்டபம் அமைத்து வர்ண வேலைப்பாடுகளுடன். வெள்ளி கிரீடங்கள் அமைத்து, பக்தர்களுக்கு சொர்ண சனீஸ்வரர் அருள் பாலிக்கிறார். மேலும் மேல் மண்டபத்தில் 1.5 அடி உயரத்தில், 1 அடி அகலத்தில் நீலா தேவியுடன் அமர்ந்த கோலத்தில் ஜெய மங்கள சனீஸ்வரராக அருள் பாலிக்கிறார். உலகில் முதல் பாதாள சொர்ண சனீஸ்வர பகவான் ஆலயமாக திகழ்ந்து வரும் என்பது நம் பாரத நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியதாகும். இத்தகைய ஆலயம் அமைப்பதிற்கு முன்பாக பாரத தேசத்தில் முக்கிய மாநிலங்களில் பிரதிஷ்டை செய்துள்ள 30 க்கும் மேற்பட்ட சனி பகவான் ஆலயங்களுக்கு ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரடியாக விஜயம் செய்து, சனி யந்திரத்தை வைத்து சிறப்பு அபிஷேகங்கம், அர்ச்சனை, ஆராதனை செய்து, அங்குள்ள புனித நீர், புனித கற்கள், ஸ்தல விருக்ஷங்களின் வேர், மண், அபிஷேக சந்தனம், விபூதி போன்ற வாசனாதி திரவியங்கள் கொண்டு வந்து சொர்ண சனீஸ்வரர் விக்ரகத்தின் கீழ் வைத்து, அதனுடன் செப்பு தகடுகளில் பக்தர்கள் கைப்படை எழுதிய சனிபகவான் மந்திரத்தையும் ஆதார பீடத்தில் வைத்து, கேரளா தாந்திரிகர்களை கொண்டு அஷ்ட மங்கல தேவ பிரச்னம் பார்த்து 90 நாட்கள் தொடர்ந்து சனி சாந்தி ஹோமம் செய்து 1000 கணக்கான பக்தர்கள் முன்னிலையில் குமபாபிஷேகம் நடைபெற்றுள்ள சிறப்பு வாய்ந்த தங்க சனீஸ்வரர் மற்றும் ஜெய மங்கள் சனீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சனி ப்ரீதிக்குரிய ஹோமங்களையும், ப்ரீதிக்கான திரவியங்களையும் யாககுண்டத்தில் சேர்த்து பிரார்த்தித்து பயன் பெற்று செல்கின்றனர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ண சனீஸ்வரர் ஆலயத்தில் சனி ப்ரீதி ஹோமம் மற்றும் பூஜைகள் வருகிற 07.12.2019 சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.
சனி ப்ரீதி ஹோமத்தின் பலன்கள் :
சனிக்கிரகத்தினால் ஏற்படும் குடும்ப கஷ்ட நஷ்டங்கள் குறையவும், உடல் நலம் பெறவும், விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், கடன்கள் அடையவும், அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறவும், பித்ரு தோஷம், திருமணத் தடை, புத்திர பாக்கிய தடை போன்ற தோஷங்களுக்கு நிவாரணம் பெறவும், வீடு, தொழில் துறையில் இடமாற்றங்கள் வேண்டுபவருக்கு மாற்றம் கிடைக்கவும், வீட்டில் பிள்ளைகள், சொல்பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தலும், தொழில், உத்யோகம், வியாபாரம் போன்றவைகளில் ஏற்படும் தடைகள் நீங்கவும், ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, சனி திசை, சனி புக்தி போன்றவையின் தாக்கம் குறையவும், மேலும் சனி பகவான் ஆசிர்வாதங்களை பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் மகிழ்ச்சியான நல்வாழ்வு வாழவும் மேற்கண்ட பூஜைகள் நடைபெற உள்ளது.
மேற்கண்ட யாகத்திற்கும், பூஜைக்கும் எள், நல்லெண்ணை, கருப்பு, நீல வஸ்திரங்கள், வண்ணி சமித்துக்கள், பச்சரிசி, நெய், பழங்கள், புஷ்பங்கள், அளித்து யாகத்தில் பங்கேற்று சனி பகவான் அருள் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.