

இராணிப்பேடை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் குடியரசு தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு நாளை 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை குடியரசு தின கொடியேற்றமும், அயோத்தியில் விரைவில் ராம ஆலயம் அமைய வேண்டி ஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும், சொர்ணம் பூசபட்ட வாஸ்து யந்திரம், மச்ச யந்திரங்களுக்கு விசேஷ பூஜைகளும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து நடைபெறும் கூட்டு பிரார்த்தனையில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பிரார்த்தனை செய்ய உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
குறிப்பு : வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி மூலவருடன் 78 பரிவார தெய்வங்களுக்கும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களும் திருச்சன்னதிகள் அமைந்துள்ளன. நாளை வாஸ்து நாள், குடியரசு தினம் முன்னிட்டு சிறப்பு பூஜைகளாக பட்டாபிஷேக ராமர், சஞ்சீவி ஆஞ்சநேயர், பாரத மாதா, வாஸ்து பகவான் போன்ற தெய்வங்களுக்கு ஹோமங்கள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது.