Republic Day Celebration

வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் குடியரசு தினம், வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 26.01.2019 சனிக்கிழமை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள பாரதமாதாவிற்கும், வாஸ்து பகவானுக்கும் அபிஷேகத்துடன் சிறப்பு ஹோமங்களும், ஆரோக்யம் தரும் ஆறு ஹோமங்களும் நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இந்த உலகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் எந்த விதமான பேதமும் இல்லாமல் சமத்துவம் நிறைந்த ஒரு பீடமாக விளங்கி வருகிறது வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.

ஜாதி, மத பேதம் பார்க்காமல் சகல மதத்தவர்களும் ஆரோக்யம் வேண்டி இங்கு வந்து பிணி தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானைத் தரிசித்துத் தங்களது பிரார்த்தனைகளை அவர் முன் வைக்கிறார்கள். அது மட்டுமல்ல. அவர்களது பிரார்த்தனைகள் பலித்து அதற்குண்டான பலனையும் பெற்று சிறப்பாக இருப்பதாக ஸ்வாமிகளிடம் தெரிவித்து வருகிறார்கள்.

இன்று வாஸ்து நாளை முன்னிட்டு பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள வாஸ்து பகவானுக்கு வாஸ்து தோஷங்கள் அகல வாஸ்து சாந்தி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது.

மேற்கண்ட வைபவங்களில் சென்னை திரு. R. குணசேகரன், சென்னை திரு. A. தயாளன், சென்னை திரு. K. ஸ்ரீனிவாச பிரசாத், சென்னை திரு. J. ஜானகிராமன், சென்னை திரு. R. பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images