

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கடந்த நவம்பர் 13.11.2016 தொடங்கிய ஸம்வத்ஸர அபிஷேக ஹோமங்களின் நிறைவு விழா 19.11.2016 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ,திருமதி நிர்மலா முரளிதரன் அவர்களின் பரிபூர்ண ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த ஹோமங்களில் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீ ஸ்ரீ சக்தி அம்மா அவர்களும் இரத்தினகிரி ஸ்ரீ ஸ்ரீ பாலமுருகனடிமை ஸ்வாமிகள் ,கலவை ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்களும் கலந்து கொண்டு ஆசி வழங்கினர்.
மேலும் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா அவர்கள் 1 கோடி தனலட்சுமி பீஜ மந்திர ஜப ஹோமத்தை தொடங்கி வைத்தார். ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி தாயாருக்கும் அபிஷேகம் செய்து சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக.சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாலா அவர்கள், பல துறை அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருவருள் பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version