

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீகயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி மாதத்தின்முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வருகிற 05.10.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை சனிதோஷ நிவர்த்தி ஹோமமும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு பஞ்ச திரவிய அபிஷேகமும், ஸ்ரீபாதாள தங்க சனீஸ்வரருக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரிய குமரனே சனி. யமனின் தமயன் இவன். நீண்ட ஆயுளுக்கும்,மரணத்திற்கும் அதிபதி சனியே. சனி ஜாதகத்தில் அசுபனாக இருந்தால் ஒருவன் எல்லாவித துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். சனி நல்ல பலம் பெற்றிருந்தால் சர்வ நலன்களையும் அடைய வாய்ப்பு உண்டு. சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை, என்பது வழக்கு மொழி. சனி என்றாலே நம்மையறியாமல் நமக்கு பயம் ஏற்படுகிறது. சனி ஆயுள்காரகன் என அழைக்கப்படுகிறார். அளவற்ற துன்பங்களுக்கு இவரை காரணம் ஆகிறார். சனி பகவான் நிறைய துன்பங்கள் கொடுத்தாலும் இவர் சிறந்த நீதிமான் ஆவார். அளவற்ற துன்பத்தை அளிப்பது போலவே அளவற்ற நன்மையும் செய்வார். சனீஸ்வர பகவானை வழிபட்டால் செய்வதால், நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் பெற முடியும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சனீஸ்ரரை வேண்டி நடைபெறும் ஹோமத்திலும், அபிஷேகத்திலும், விசேஷ பூஜைகளிலும் பங்கேற்று வழிபடுவதின் மூலம் தெய்வீக அருளால், தர்மத்தின் பாதையில் நடக்க முடியும்,கடவுளோடு இணைந்த ஒரு வாழ்க்கையை வாழ முடியும், கருணையும், பணிவும் வளரும், எல்லைகளை வகுத்து,அதற்குள் ஒழுக்கமான வாழ்க்கை வாழலாம், நம் பாதையில் வரும் வாய்ப்புகளைப் சரியாக பயன்படுத்தி வெற்றியை அடையலாம், இயல்பாகவும், யதார்த்தமாகவும் இருந்து இலட்சியங்களை அடையலாம், தொழிலில் முன்னேற்றம் பெறலாம், உங்கள் அதிகாரம் மேம்படும், கடமை உணர்வு ஏற்படும், ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வு வளரும்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று வாழ்வில் வளம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.