

இன்று 24.01.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தை அமாவாசை மற்றும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு அமாவாசை மிளகாய் யாகம், சனி பெயர்ச்சி யாகம், நூல் வெளியீட்டு விழா இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் நடைபெற்றது.
இதில் ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ராசிகள், சனிதிசை, சனிபுக்தி நடைபெறுபவர்களுக்கு சனி சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகத்துடன் பஞ்ச கலச திருமஞ்சனமும், ‘சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – 2023’ நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருஷ்டி தோஷங்கள் அகலவும், சத்ரு உபாதைகள் தீரவும், பித்ரு சாபங்கள் தீரவும், இயற்கை வளம் வேண்டியும் தை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் கொண்டு திருஷ்டி துர்கா யாகமும் ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இவ்வைபவங்களில் சென்னை ஜோதிடர் திரு. விமல் பாஸ்கர், காசிமேடு திரு. சிவமுருகேசன், கரூர் திரு. முத்துராஜா, இராணிப்பேட்டை பெல் திரு. முல்லை, திருநெல்வேலி திரு. காந்திமதிநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி, சொர்ண யந்திரம், தன்வந்திரி டாலர், ஹோம பஸ்மம், தாமரை மணி பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.